சனி, 23 பிப்ரவரி, 2013

ஞாபகங்களின் கட்டளைகளை
நான் எப்போதும் ஒழுங்காகச் சேமிக்க விரும்புகிறேன்..
காற்றாடிகளுக்கு
நான்கு கட்டளைகள்
கடிகாரத்திற்கு
பணிரெண்டு கட்டளைகள்

தினத்திற்கும் ஓயாமல்
கட்டளையிடும்
உனதன்பின் எச்சரிக்கைகளை நான்
பொருட்படுத்துவதில்லை..

அதுமட்டுமல்ல
கட்டளைகள் பற்றி
எனக்கு ஒன்றும்  தெரியாது

ரகசியங்களை
வைத்துக் கொண்டு எந்தக்
கட்டளையையும் பிறப்பிக்க முடியாது

இவ்விடத்தில்
ரகசியம் என்பது நான்
கட்டளை என்பது நீ
இவ்விரண்டும் ரகசியம்

இது
கண்ணாடிப் பெட்டகக் கவசம்
பத்திரமாகக் கையாளவும்..
உங்கள் கட்டளைக் குறிப்புகள்
அவை அறியாது..“

மலர்களிடம்  ரகசியமும்  இல்லை
கட்டளைகளும்  இல்லை
என என்னிடம்  மலர்கள்
சொன்னதாக ஒரு ஞாபகம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக