செவ்வாய், 25 டிசம்பர், 2012

vishnupuram Award cermony function -II part


ஜெயமோகனின் துவக்க உரையில் தனது இந்தப் பணிக்கு உதவுகிற நண்பர்களைப் பெரிதும் நன்றி பாராட்டினார். தனக்கு உதவும். ஒருவர் மற்றும் பலரைப் பாராட்டிப் பேசி நான் கேட்டுப் பலவருசங்கள் ஆகிவிட்டது காதுகுளிரக் கேட்டேன்.

விஷ்ணுபுரம் நண்பர்கள் உண்மையிலேயே இலக்கியம் கண்டு கொண்ட பாக்கியசாலிகள் ஜெயமோகன் இந்தப் பணியை எந்நாளும் மறக்கக்கூடாது. எந்த நிலைவந்தாலும் அவர்களைத் துவேசித்து விடக்கூடாது. அற்புதமான களப்பணியாற்றும் இலக்கியப் பித்தர்கள். அவர்கள் மீது எந்த நாளிலும் கொலைப் பழியோ வேறெந்த வசைபாடலோ செய்து விடவேண்டாம் என்று வெட்கத்தை விட்டு கால்களில் விழுந்து மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் ஜெயமோகன் உங்ளை..

           அப்படி ஒரு நிலையில் துவேச துதி ஆராதனை செய்ய வேண்டும் என்று தோன்றும் பட்சத்தில் இருக்கவே இருக்கிறார்கள். வீணாய்ப்போன உங்களுக்கு மூத்த இலக்கிய வாதிகள். அவர்களை தூபிக்கலாம். இந்த நண்பர்களை நீங்கள் கொண்டாடியே ஆகவேண்டும்..

          இருந்தாலும் உங்களை நினைத்தால் வயசுக்கு வந்த பிள்ளையை வீட்டில் வைத்துக் கொண்டிருக்கும் கைம்பெண் மனநிலைதான் எனக்கும்.. எந்த நேரத்தில் எப்படி சாமியாடு வீர்களோ..யாருக்கும் தெரியாது..

                  தேவதேவனை முதலில் பார்த்த நிகழ்வு குற்றாலத்தில் கலாப்ரியா நடத்திய கவிதைப் பட்டறையில் தாம் முதலில் சந்தித்தேன். இது போலவே எளிமையாக வந்திருந்து கவிதை வாசித்தார்.நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்---துள்ளி விழுகையில் கண்டது சுடும் பாறை---மீண்டும் துள்ளுகையில் பறவையின் கொடுங்கால்மேலும் ஒரு துள்ளலில் மரணம்

மரித்த கணமே பறவைஇந்தக் கவிதையை வாசித்த கணமதி்ல் நான் அடைந்த பரவசம் இன்று வரை நீடிக்கிறது. அன்றிலிருந்து அவருடைய கவிதைகளை நான் பல இடங்களில் மேடைகளில் பேசி வருகிறேன்.தேவதேவனைத்தவிர எல்லாக் கவிஞர்களும் துக்கத்தையும் துயரைத்தையும் பாடாமல் இருக்கமாட்டார்கள் இருந்ததுமில்லை. தேவதேவன் மட்டுந்தான் துக்கத்தைப் பாடாத கவிஞன்.அவர் கவிதைகளில் துயரத்தை நீங்கள் காணவும் முடியாது. அவர் பற்றிய அனுபவத்தைச் சொல்ல முடியும். ஒரு முறை அவரைப் பார்க்க நான் தூத்துக்குடி போயிருக்கிறேன்.நானும் என் மகனும் போயிருந்தோம். அவர் வீடு தெரியாததால் பேருந்து நிலையத்திலிருந்து போன் செய்து விட்டு காத்திருந்தோம். அவர் ஒன்லி விமல் என்னும் பெரிய விளம்பர போர்டுக்கு எதி்ரில் நிற்கிறேன் என்றார். அதுபோலவே அவர் அங்கு நிற்கவில்லை. நானும் மகனும் ஒவ்வொரு இடமாகத்தேடிக் கொண்டு வந்தபிறகு அங்கு ஒரு கடையில் மிக சாதாரணமாக அமர்ந்து கொண்டிருந்தார்.என்ன இப்படி பண்ணிட்டிங்க..ரொம்ப நேரம் தேடி ஓய்ந்திட்டோம் என்றதும் அவர் பாருங்க ஜெயன் இங்கிருந்து பார்த்தா ஒன்லி விமல் தெரியுது  பாருங்கள். என்றார் அவர்தான் தேவதேவன். அவருடைய கவிதைகளுக்கும் அவருக்கும் வித்தியாசம் காணமுடியாது.

           பொற்கொல்லர்கள் தங்க வேலை செய்யும் போது ஒவ்வொரு ஆபரணங்களுக்கு தனித்னியாக கிடுக்கிகள் வைத்திருப்பார்கள். அவைகளை பணிக்குத்தகுந்தமாதிரி கிடுக்கிகளைப் பயண்படுத்துவார்கள். அப்படியாக தேவதேவன் தன்னுடைய கவிதைகளில் இயற்கை சூழலியல் மரங்கள் நிழல் பறவைகள் என்று அற்புதமான படிமங்களை அவர் உருவாக்கியிருக்கிறார். சிறுவயதில் நான் பட்டாம்பூச்சிகளைப் பிடித்து விளையாடியிருக்கிறேன். பிறகு அவைகள் நம்மிடமிருந்து பறந்து போகும் அப்போது கைவிரல்களில் வண்ணங்கள் ஒட்டியிருக்கும் அதுபோலத்தான் தேவதேவனின் கவிதைகள். பால் சக்கரியாவின் ஒரு சிறுகதையை ஞாபகப்படுத்தினார் மூன்று குழந்தைகள் இறந்து சொர்க்கத்திற்கு போகிறது. ஒரு குழந்தை போர்களின் பொழுது இறந்த குழந்தை.இன்னொரு குழந்தை கருவிலேயே இறந்த குழந்தை இனியொன்று மூச்சுத்திணறி இறந்த குழந்தை. சொர்க்கத்தில் ஒரு பெரியவர் அவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களின் நிலையை பரிவுடன் விசாரிக்கிறார்.அப்பொழுது கருவிலேயே இறந்த குழந்தை தன்னுடைய பெற்றோர் தெரியமால் வருந்தும் போது அந்த துறவி உங்களைப் போன்றவர்களைக் காப்பதற்குத்தான் நான் வந்திருக்கிறேன் என்கிறார். அது போலத்தான் கவிதையும். கவிதை மட்டும் எல்லாப் புறக்கணிப்புகளையும் தனித்து விடப்படுகிற மனதை ஏற்பவையாகவும் இருந்து வருகிறது

          அப்படித்தான் நானும் கவிதைகளைத் தேடித்தேடி வாசிக்கிறேன். என்னால் ஒரு நாளில் ஒரு கவிதையாவது வாசிக்காமல் இருக்கமுடியாது. ஒவ்வொரு முறையும் கவிதைகளை வாசிக்கும் போதும் புத்துணர்வாகித் திரும்புகிறேன்.    தான் ஒரு முறை குடும்பத்திருமணவிழாவிற்குப் போயிருந்த போது நான் குழந்தையாக சிறுவனாக இருந்தபோது பார்த்த பாட்டிகள் பலர் அங்கு வந்திருந்தார்கள். என்னை அறிமுகப் படுத்திக்கொண்டபோது மகிழ்ச்சி அவர்களுக்கு. ஐந்து வயது குழந்தையாகவே பாவித்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்கள்.அப்பொழுது நானும் அந்த வயது குழந்தையானேன்.

புறப்படும் பொழுது அந்தப் பாட்டியின் தொட்டு வணங்கி கிளம்புகிறேன் என்றதும் அழ ஆரம்பித்து விட்டார்கள்.அந்த ஸ்பரிசம் அவர்களை நெகிழச்சியடைய வைத்திருக்கவேண்டும்.

குழந்தைகள் வளர்ந்து ஆளானபிறகு தங்கள் பெற்றோர்கள் குடும்பத்தவர்களுடனான தொடு உணர்ச்சிகளை மறந்து விடுகிறோம். நாம் யாரையும் தொட்டுப் பேசுவதில்லை. அப்படியான ஏக்கம் எல்லோருக்கும் குறிப்பாக வயதானவர் களுக்கு நிறையவே இருக்கிறது. பிறகு வீட்டினுள்ளே சென்று மற்ற பாட்டிகளிடமும் தொட்டு வணங்கி புறப்படுகிறேன் என்றதும் அவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள்.

                மகள் சைதன்யாவிற்கு மூன்று வயதிருக்கும் போது ஒரு பெரிய டாங்கர் லாரியைப் பார்த்து அங்க பாருங்க மாத்திரைஎன்றாள். அதுபோலவே சிறு ஊர்ந்து போன பூச்சியைப் பார்த்து ரயில்என்றாள். பிறகு வளர்ந்து ஆளானதும் அவர்களுடைய உலகம் மாறிவிட்டது. குழந்தைகளின் கற்பனை ஒன்றை அவர்கள் உருவப்படுத்தும் அழகு கவிதைகளின் ஆதாரம் தேவதேவன் கவிதைகளில் இவைகளை அவர் அநாயசமாக எழுதிப் போகிறார். இப்பொழுதும் அவரால் புதுமையாக யோசிக்க முடிகிறது.

            தேவதேவனின் கவிதைகள் இதயத்தின் குருதி சேர்த்துத்தீட்டப்பட்டவை. ஆகவே நம் காலகட்டத்தின் வேறெந்தச்

சொற்களையும் விடக் கூர்மையானவை. ஒரு சாதாரண வாசகனாக அல்ல. தமிழின் இந்தக் காலகட்டத்தின் முதன்மையான எழுத்தாளனாக இந்தக் காலகட்டத்தின் இலக்கிய மதிப்பீடுகளைத் தீர்மானிப்பவர்களில் ஒருவனாக நின்று ஒன்று சொல்கிறேன். இந்தத் தூத்துக்குடி நகரம் எல்லாம் அழிந்து போகும் ஒவ்வொரு செங்கல்லும் அழிந்து போகும் எல்லாம் அழியும்.நாம் இறந்து போவோம். இந்த அவையில் அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் இறந்து மறக்கப்படுவீர்கள் உங்கள் குழந்தைகள் மறக்கப்படும் இந்நகரின் ஒவ்வொரு கட்டிடமும் ஒரு கல் இன்னொரு கல் மீது அமராதபடிக்கு இல்லாமலாகும் அதன் பின்னரும் தேவதேவனின் கவிதைகள் வாழும். என்றார்.

            ஏழு விக்கெட் இழப்பிற்பில் தள்ளாடிய ஆட்டத்தை தனியாளாக மறுபடியும் அரங்கத்தை உணர்ச்சி பொங்க வெற்றிக்கு இழுத்து வந்தது பங்கேற்பாளர்களுக்கு நிம்மதி வந்தது.

அவருடைய உவமைகள் தினத்தந்தி வாசகர்களுக்கு புரிகிற வடிவத்தில் இருந்தது. நன்மைதான். வாரமலர் கடைசிபக்க கவிதைகள் வாசிப்பவர்கள் தேவதேவனைக் கொஞ்சமாச்சும் தேடுவார்கள். அந்த வகையில் ஜெயமோகனின் கவிதைகளுக்கான உரையின் 2013 ஆண்டில் கவிதையின் வளம் பற்றி இல்லை. அவரும் 85-86- பேட்டன் வடிவிலேயே பேசினார்.               சுகாவின் கேள்வியான இலக்கியவாதிகள் சினிமாக் காரர்களை விமர்சிப்பதற்கு அருகதையில்லை என்றதிற்கு அவர் பதில் சொல்லவில்லை எனினும் தேவதேவன் கவிதைகள் பற்றிய உரையில் மிச்சமீதியில்லாமல் பிலிம் ரோல்கள் அழிந்து போகலாம் மிஞ்சி நிற்பது தேவதேவனின் கவிதைகள் தான் ஆதலால் தேவதேவனைக் கொண்டாடுபவர்களுக்கு அருகதை உண்டு என்று சொல்லாமல் சொல்புதிதாகச் சொன்னார் எனலாம்.

            ஏற்புரையாற்ற தேவதேவன் வந்ததும் குறிப்பாக தான் தயாரித்த உரையை வாசித்தால் ஒரு மணிநேரம் ஆகலாம். காலத்தின் அருமை கருதி சில பக்கங்களை மட்டும் வாசிக்கிறேன் என்றார்.

            இசைஞானியும் சுகாவும் எழுந்து கொண்டனர். மறுநாள் ராஜாவிற்கு மறுநாள் மிகப்பிரமாண்டமான லைவ் இசை நிகழ்ச்சி நகரின் பிரமாண்ட மைதானத்தில் நடக்க விருக்கிறது. தன் கலைஞர்களுடன் நடத்தும் விழாவிற்கான ஒத்திகைக்கு செல்லவேண்டும். எனப்புறப்பட்டார். ஒரு இலக்கிய விழாவில் ஒரு பல்லாயிரம் கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுத்து தேவதேவனே அழிந்தாலும் அவர் கவிதைகள் அழிந்தாலும் புத்தம் புதிதாக உருவாகும் உலகத்தின் புழு பூச்சியனங்களின் சத்தம் வாயிலாக தன் இசையைத் தவழ விடுகிற அதிசய சங்கீத பிரம்மம். சேரியின் அதிர்வை உலகெங்கும் இயற்கையின் ஓசையுடன் ஒன்றாகக் கலக்கி சேர்த்து எல்லா ஓசையும் இளையராஜாவுடையதே என்று பார் போற்றும் எளியோன். வாழ்ந்து கொண்டிருக்கிற சத்தியமும் நித்யமுமான தெய்வம் இளையராஜா என்று எளிய பரதேசியாக ஒரு இலக்கியத்தால் பாழாய்ப் போய்க்கொண்டிருக்கும் ஒருவனாக சமூகத்தின் நிகழ்வு தகவுகளில் அதன் உய்வு பற்றி சதா யோசித்து எழுதிக் கொண்டுமிருக்கிற, சாகும் வரை நோட்டிஸ் வினியோகிக்கிற வாழ்வை அடைந்துள்ளவர்களில் ஒருவனாக இந்த உலகத்திற்கு அறிவித்துக் கொள்கிறேன்..

விடைபெற்றுக் கொண்டார். இசைஞானி..அரங்கம் கம்போசிங் முடிந்து பாடல் நேரடியாக பதிவு செய்யப்படுவது போன்ற அழகில் தேவதேவன் தனது உரையைத் தொடர்ந்தார்.

 அவரை விடவும் அவரைக் காணவந்து இலக்கிய நிகழ்வுகளுடன் கலந்து சபை கண்ணியம் காத்து ராஜாவிற்கு பெருமை சேர்த்த அவருடைய இசைப்பிரியர்களும் பக்தர்களும் அவரை வழியனுப்பி வைத்தார்கள். ராகதேவன் எந்த அலங்காரத்தையும் தோரணையையும் மாற்றாமல் அப்படியே இருப்பது கண்டு அதிசயம் கொண்டார்கள். சிலர் தொட்டுப்பார்த்தார்கள்.அதே கிராமிய நிறம். கிராமக்குரல் சோள வெதைக்கயில சொல்லிப் புட்டுப் போனவளெ.. தன் இனத்தை அப்படியே கண்ணில் வெச்சுப் பாதுகாக்கும் பேழகன் உலகின் அதிக இதயத்தைக் களவாடிவரும் மகா புருசன் மகா கண்ணபிரான் இளைராஜாவை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தார்கள். போ ராசா போ..உலகம் எங்கயும் இல்லடா..எதடா நீ விட்டு வெச்ச எல்லாத்தையும் வாங்கிட்டயே

என்றான் அவர் இனத்தான் ஒரு ரசிகன்.இதை எழுதும் போது அவருக்கு சங்கீத நாடக அகடாமி விருது அளித்திருப்பதான செய்தி வந்தது. நான் டைப் செய்யும் போது யாராவது விருது வாங்குவார்கள் என்ன இன்னும் ஒண்ணும் நடக்கலையேன்னு பார்த்தேன். கிடைத்துவிட்டது.ராசாவிற்கு..

          இளையராஜாவுடன் இருந்த அந்த மூன்று மணிநேரம் அதோடு இலக்கிய நிகழ்வும்.மறக்க முடியாததுதான்.

அந்த மனிதர் இளையராஜாவை வழியனுப்பி விட்டு மறுபடியும் எங்கள் அருகில் வந்து அமர்ந்தார். மிகுந்த சுவராசியத்துடன் நிகழ்வைக் கவனிப்பதை அறிந்து மகிழ்ந்தேன். தேவதேவன் ஏற்புரைக்கு வந்தபோது கைதட்டி வரவேற்றவர் அந்த மனிதர் மட்டும்தான்.

              தேவதேவன் பேசும் போது ஒவ்வொரு வார்த்தைக்கும் மந்திர உச்சாடனத்தின் போது இருகைகளையும் உயர்த்தி உற்சாக மாகத் துள்ளும் பக்தனைப் போல அவர் ஆரவாரிக்கிறார்.நானும் இளவேனிலும் ஆச்சர்யமாக கவனிக்கிறோம்.

            எனக்கும் ஜெயமோகனுக்குமான உறவு நெடுங்காலம் கொண்டது. அவர் நடத்தும் எல்லாக் கூட்டங்கள் கருத்தரங்குகள்

ஆகியவற்றில் அடுத்ததாக அவரைப் போலவும் நானும் கலந்து கொண்டிருக்கிறன். நான் எழுதிய முதல் கவிதையையே என்னுடைய புனைப் பெயராக வைத்துக் கொண்டேன். தேவதேவன் என்பதன் மீது எனக்கு ஈர்ப்பு எப்படி வந்தது என்று சொல்ல முடியவில்லை. என்னுடைய கவிதைகளைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் உரையாடல்கள் பதிவுகள் எனக்கு மிகவும் மதிப்பு வரவழைத்தவை. சற்று முன்பு நான் அமர்ந்திருந்த நாற்காலி இப்பொழுது பாருங்கள் ஒரு வெற்றிடம் தெரிகிறது அந்த நாற்காலி தனியனாக இருக்கிறது. இந்த மௌனம் தான் நான் மற்றும் என் கவிதை. இப்போது அந்த நாற்காலியை மட்டும் பாக்கிறீர்கள் அதில் நான் இல்லை. அது போலத்தான் நீங்களும் உங்கள் நாற்காலிகளும். இந்த மௌனம் தான் வாழ்க்கை இந்த இருப்பும் இருந்த நிலைபற்றிய அவதானிப்புதான் கவிதையாகிறது சதத் ஹசன் மாண்டோவின் சிறுகதை ஒன்று நினைவு கூர்ந்து மதங்களின் பால் கூட நம்பிக்கை கொள்ளமுடியாது. வெற்றிடமும் அன்பும் மட்டுமே இன்மையும் தான் கவிதையின் முக்கியமான வடிவமாக அமைகிறது.

       ஒரு முறை புத்தர் தன் மாணவர்களுக்கு தத்துவமும் கலையையும் போதிப்பதற்காக வெளியில் அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது மரத்திலிருந்து குருவிகள் சில கிச் முச் கிச் கிச் என்று சத்திமிடுகிறது. புத்தர் உள்பட எல்லோரும் உன்னிப்பாகக் கேட்கிறார்கள். பிறகு எல்லோரும் எழுந்து கொள்கிறார்கள் புத்தர் இன்றைய பாடம் முடிந்து விட்டது போகலாம் என்கிறார். அதுபோலத்தான் எனக்கு இயற்கையும் இயற்கையின் உயிர்களும்

        

          ஒரு சூழலில் இந்து மதத்திற்கு இங்குள்ள மதமாற்றங்களால் ஆபத்து நேருவதாக உணர்ந்த தாகூர் 50 களில் ஒரு இந்திய அளவில் முக்கியமான மதத்தலைவர்களை வைத்து மாநாடொன்றைக் கூட்டுகிறார்கள். அதன் பிறகு மதங்களின் அமைப்புகள்  வளர்கிறது. அதன் பிறகும் கூட மனித மனங்களின் வெற்றிடமும் மௌனமும் இருந்து வருகிறது.

 அப்படியான ஒன்றினைப்புகளை இலக்கிய படைப்புகளுக்காக மூத்த படைப்பாளிகளை கௌரவிப்பதற்காக இந்த விழாக்கள் அவசியம். அது போலவே நமது இலக்கியப் பணிகளுக்கும் படைப்பிலக்கியங்களுக்கும் பிரச்சனை நேரும் போது ஜெயமோகன் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி வருகிறார். நான் விஷ்ணுபுரம் இலக்கிய நண்பர்களுடன் இணைந்து இயங்கி வருகிறேன். இருந்தாலும் கூட எனக்கு விருது வழங்கப் போகிறார்கள் என்பது தெரியாது. என் மேல் கொண்ட அன்பிற்கு நன்றி.

             அவருடைய உரையின் போது அவரை அவருடைய வெறுமையான இருக்கை மௌனமாக இருந்து அவதானித்துக் கேட்கிறது. பிற்பாடு அது தேவதேவனை அழைத்து தன் மடியில் அமரவைத்துக்கொண்டது. என் பக்கத்தில் இருந்த அந்த மனிதர் ஏனென்று தெரியாமல் அப்படிக் கைதட்டினார்.

             அரங்கம் மறுபடியும் மாநகராட்சி கலையரங்கமாக மாறியது. அரங்க விமானம் கீழிறங்கியது. சமதளத்தில் கால் பாவுவதை அதிசயமாக உணர்ந்த இலக்கிய ஆர்வலர்கள் தத்தம் வாகனங்களின் இருக்கைகளை அதிசயமாகத் தடவித்தட்டினார்கள்

             மறுபடியும் இரண்டாவது சுற்று பட்டாணி சுண்டல் விற்பவர்கள் போல நானும் இளவேனிலும் அழைப்பிதழ்களை விநியோகி்த்தோம். சில தீவிர இலக்கிய நண்பர்களுக்கு அப்படியே இரண்டாவது ஆட்டமாக இதே நிகழ்வு முதலிலிருந்து தொடர்ந்தால் ஆகாதா என ஏங்கினார்கள் போல. அவ்வளவு சீக்கிரம் கிளம்ப மறுப்பது போலிருந்தது. வெளியில் தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கும் பத்திரிக்கை ஊடகவியல் புகைப்படக் கலைஞர்களுக்கும் சிறு வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அது அரங்கினுள்ளே எதிரொலிக்காத வண்ணம். பிறகு நிகழ்ச்சி முடிந்தது அறிந்ததும் சமாதானமானார்கள்.

         இறுதியாக நிகழ்வுகள் பற்றிய புதுமையான விசயங்கள் ஓட ஆரம்பித்தது. அது நிகழ்ச்சி மற்றும் வடிவமைப்பு நடந்த காட்சிகள் உணர்வுகள் பேசப்பட்ட கருத்து பார்வையாளர்களின் உணர்ச்சிப் பெருக்கு கலந்து கொண்டவர்களின் பங்களிப்பைக் கவனித்தபோது நிகழ்வு 85-86-87 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டது போன்ற பிரமையை ஏற்படுத்தியது இது உண்மை. ஒரு வேளை நிகழ்வின் தயாரிப்பு தொகுப்பில் அப்படியாவே இருக்க வேண்டும் என நினைத்து உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் இந்த விழா அதிசயம் மிக்க உலகத்தரமான விழா சந்தேகமில்லை.

          அல்லது அப்படி எதுவும் திட்டமிடவில்லை.அனைத்தும் ஏதேச்சையாகவே நடைபெற்றது. என விழாக்குழுவினர் ஒப்புக் கொண்டார்கள் எனில் இந்த விழா அதிசயம் மிக்க உலகத்தரமான விழா சந்தேகமில்லை..

           அல்லது 22-12-2012 ஆண்டு மாலையில் நடைபெறும் விழாதான். எந்த மாற்றமும் இல்லை. எந்தப் பழமையும் இல்லை.

என்று உறுதிப்படுத்த ஆவணங்களைக் காட்டி கேமிராவில் உள்ள தேதியை புகைப்பட பிலிமில் உள்ள ஆதாரங்களைக் காட்டி நிரூபித்தாலும் இந்த விழா அதிசயம் மிக்க உலகத்தரமான விழா

சந்தேகமில்லை.

        விழாவை நடத்திய விஷ்ணுபுரம் நண்பர்கள் எந்த நிகழ்வை வேண்டுமானாலும் வேறு நகரங்களுக்கு விட்டுத்தருவோம் விருது வழங்கும் விழாவை மட்டும் கோவையைத்தவிர வேறு நகரத்திற்கு மாற்றமாட்டோம் என உறுதியளித்திருக்கிறார்கள். அதற்காக நன்றி..

         அதுபோலவே மணிரத்னம் பாரதிராஜா ஆகியோருக்கு வந்த பங்கேற்பாளர்கள் வருகையை விடவும் இளையராஜாவிற்கு வந்த பங்கேற்பாளர்கள் அதிகமாக இருந்தது. என்பதும் உண்மை.

பூமணி குறித்த பாரதிராஜா பேசியவை இப்பொழுதுதான் தானாக அழிந்து போனது.

        சென்ற இருவிழாக்களில் வாய்ப்பளிக்கப்பட்ட பெண்படைப்பாளிகள் மற்றும் பெண்கள் இல்லாதது அதிர்ச்சியாக இருந்தது. ஏன் இந்த நிராகரிப்பு எனத் தெரியவில்லை. ஒருவேளை மேடையில் இரண்டு துறவிகள் இருந்ததால் தவிர்த்து விட்டிர்களா நண்பர்களே. வெறும் சம்பிரதாயத்திற்காக வாவது இரண்டு பெண் படைப்பாளிகளை மேடையில் அமர வைத்திருக்கலாமே. ஏதேச்சையாக விடுபட்டுள்ளது என்பதை நம்புவதற்கு மனம் ஒப்பவில்லை.

        அடுத்ததாக கமல் ஹாசன் அழைக்கப்படும் போதும் கமல் இருக்கிறார் என்பதால் தவிர்த்து விடவேண்டாம். அது போலவே அடுத்த முறை கமல் வருவதால் 2013 விருது யாருக்கு என்பதையும் இப்போதே கணித்து விட்டேன்..விருது பெறுகிறவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்..

 

         

        சிக்னலில் பச்சை அம்பிற்குக் காத்திருந்த போது அந்த மனிதரைப்பார்த்து அதிர்ச்சியடைந்தேன். கையில் எங்களிருவருக்குமிடையில் இருந்த நாற்காலியை வைத்துக் கொண்டிருந்தார்.இரவு பத்துமணி வேறு. உடனே பதறாமல் அவரிடம் போய் என்ன காரியம் செய்தீர்கள்.தாருங்கள் அதை வாங்கிக் கொண்டு திரும்பவும் அரங்கம் வந்து காவலரிடம் அவர் செய்த அறியாத காரியம் பற்றியும் விளக்கி தந்தோம். காவலரோ பார்த்துக் கூட்டிப்போங்கள். என்கிறார். இளவேனிலுடன் அனுப்ப முடியாது. நான் அவரை என் வண்டியில் ஏற்றிக்கொண்டேன்.

         ஆர் எஸ் புரம் விநாயகர் கோவிலில் தங்கமயில் முருகனின் மயில்வாகனம் என்று சீர்காழி பாடியது எனக்கு தங்கமயில் தேவதேவனின் மயில்வாகனம் என்பதாகக் கேட்கிறது.

இன்றைய காலையைத் துவக்கிய சீர்காழி கோவிந்த ராஜன் அவரே இன்றைய இரவையும் முடித்து வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரும் அந்தப் பாடலை விரும்பிக் கேட்டது அதிசயம்தான். வண்டியைக் கிளப்பி மெதுவாக நகர்த்தினேன்.

நீங்க எங்க போகணும் என்றேன். அவரோ ராமநாதபுரம் என்றார்.

என்னை நீங்க..நான் இருகூர் 15 கிலோ மீட்டர் என்றேன். அவர்

இவ்வளவு தூரம் நடந்தா போவீர்கள் என்றார்.

       நான் நான்கு பிரேக்குகளையும் ஒரு சேர அழுத்தி வண்டியை நிப்பாட்டினேன். தலைசுற்றியது. உடல் நடுங்க ஆரம்பித்தது. என்னால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. பின்தொடர்ந்த வந்த இளவேனிலிடம் அந்த மனிதரை ஏற்றிக்கொள் எனப் பணித்தேன். அவர் நான்தான் அப்பவே சொன்னென் நான் என் வண்டில ஏத்திகறன்னு.. இளவேனில் சங்கடப்பட்டார்.

சார் நீங்க அவர் வண்டில ஏறிக்கங்க. என்றதும்.

ஏறிப்போகும் முன்பு என்னைப் பார்த்து அந்த ஆள் தங்கமயில் தேவதேவனின் மயில்வாகனம்உற்சாகத்துடன் கைகள் உயர்த்தி பாடி ஆடுகிறார். எனக்கு மறுபடியும் தலைசுற்றி வந்தது. நாக்கு வறண்டது.

         இளவேனில் வண்டியை மெல்ல நகர்த்தினார். நான் கொஞ்சம் ஓய்வாக அந்த மரத்தினடியில் நின்றேன்.. வாகனங்கள் எல்லாமே நாற்காலிகளாக மாறி ஊர்ந்து போகிறது போலிருந்தது. எங்கு பார்த்தாலும் நாற்காலிகளை மக்கள் தூக்கிக்கொண்டோ அல்லது நாற்காலியை தள்ளிக்கொண்டோ போவதாகவே பார்க்க முடிகிறது.

காது மூக்கு வழியாக ரத்தம் கசியும உணர்ச்சி..

         சரி பாவம் மனிதனின் மனங்களில் எத்தனையோ..போ எங்கயோ நன்றாக இரு.. வழக்கமான திருச்சி பாதையைப் பற்றியதும் தெம்பு வந்தது. நிகழ்வை எழுத வேண்டுமே.. வரிசைக்கிரமமாக ஒவ்வொருவரின் பேச்சை பத்தியாக்கி மனதில் நிறுத்தினேன். எந்தக்குறிப்பும் இல்லை. கேள்விஞானத்தின் ஞாபகசக்தியின் துணையாக வரிசையாக எழுதவேண்டிய பேச்சின் சாராம்சங்களை வடிவெடுத்தேன். இப்படியாக எழுதுவது எனக்கு புதிது ஒன்றுமில்லை. எனினும் தேவதேவனின் உரை என்னை வெகுவாக பாதித்தது என்பேன்..

         ரேஸ் கோர்சில் அந்த இரவிலும் மசால் பொரியை வாங்கிக் கொறித்தேன்.இனி இரவு சிற்றுண்டி

வீட்டில் கிடைக்காது.

       மறுபடி காலை அலுவலகம்,பணிச்சுமை எழுத்து, அலைச்சல்..ஓய்வே இல்லாத பறத்தல்..இந்த வண்டி எத்தனை காலம் போகும்..போகட்டும்.. எத்தனை தூரம் போகுமோ அது வரை போகட்டும்..

     

       ராமநாதபுரம் சிக்னல் தாண்டி அங்கு நிற்பது வழக்கம். எப்போதும் செல்போன் அடிப்பதாகவே உணர்வு இருக்கும் ஆதலால் அவ்விடம் நின்று ஒரு முறை சரி பார்த்துவிட்டு பிறகு கிளம்புவது வழக்கம். பிறகு மளிகையோ பருவ இதழ்களோ வாங்குவதற்காகவும் நிற்கிற வழக்கம். இயல்பானது. அந்த சமயம் இளவேனிலும் குறுக்காகக் கடந்து வந்து சேர்ந்தார் வாகனத்தில்.

       எனக்கு மகிழ்ச்சி..அப்பாடா அவரும் வந்துவிட்டார். கம்பெனி கிடைத்து விட்டது இரவின் பயணத்திற்கு...

ஏன் இத்தனை லேட்..டிராபிக் ஜாமா

அப்படியெல்லாம் ஒண்ணுமி்ல்லையே..என்ன பெரிய டிராபிக் நம்ம காணாத டிராபிக்.. டுவீலர்ல வர்றோம் சந்து பொந்துன்னு கிளப்பி வரவேண்டியதுதான..

நீ ஏதாவது சாப்பிட்டியா..நான் பொரி சாப்பிட்டேன்..-

என்றேன் நான்

இல்லை போலாம்யா..ஏற்கெனவே லேட் ஆயிடுச்சு..

ஆமா நீ எங்கய்யா இந்நேரத்துல  எங்க போய்ட்டு வர்றே..என்றார் இளவேனில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக