Coffee brown கவிதைகள்..
முதன் முதலாக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட போது
அவனுக்கு தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது
அறிமுகம் ஆனது
ரெட்டைக் கண் பாலமும் பிஏபி வாய்க்கால் சாவடியும்தான்
இரண்டு பாலங்களும்
தொட்டுக் கொள்ளும் தொலைவில் இருக்கும் ..
இரண்டிலும் ஆடுகள் கூட தனித்து ஒன்றன் பின்
ஒன்றாகத்தான் போணும்.
.குறுகல் அப்படியொரு குறுகல்
நேரெதிரில் பள்ளிப் பெண்பிள்ளைகள் வந்தால்
மோதிக்கொள்ள வேண்டும்
இருட்டில் நானும் ராஜேஸ்வரியும் இருட்டில் மோதிக்கொண்டோம்..
மோதி வெதுவெதுப்பிற்குப் பிறகுதான்அறிந்தேன்
அது வெள்ளாடு அல்ல பெண்பிள்ளை என்று..
நினைத்தது போலவே அவள் எச் எம் மிடம் சொல்லிவிட்டாள்..
கூட்டாளிகள் இன்னைக்கு நீ தீந்தடா காபிக்கருமா என்றார்கள்..
பள்ளியில் அடையாள அணிவகுப்பு நடந்தது
பாருங்க அந்தக் காபி கலர்ல இருக்கானே அவன்தான் என்றாள்..
பகுதி-2
யார் வற்புறுத்தியும் கல்யாணத்திற்கு சம்மதிக்காத அவன்
அவள் பேசிய பிறகு சரி என்றான்..
கூடப் பொறப்பு ருக்குமணி
”அட நெருமோலமாப் போன காபிக் கருமா
ஈனுதாங்கேளு உன்ன ஏன் கல்யாணம் பண்ணச் சொல்றன்னா
உங்கப்பன் ஒனக்குப் பொறக்கற
பிள்ளைக்குத்தான் சொத்துன்னு எழுதியிருக்கான்
உனக்கு வந்தாத்தானே எனக்கும் இத்தப்பறம் கொடுப்பே
அதுக்குமிட்டியும் கட்டிக்கடா சாமி
உனக்குப் புண்ணியமாப் போகும்..
என்று நச்சரிக்கிறாள்.. சம்மதம் வாங்கினாள்…
பெண்பார்க்க தொலைவாகக் கூட்டி நச்சரித்தபோது
மறுத்த பிறகு ஆனவாய்க்கால் பள்ளத்தில் பார்த்த சாதகம்
சாதகமாக இருந்தது ருக்குக்கு..
ருக்குதான் குடும்பம் குழந்தையை
விட்டு விட்டு அங்குமிங்கும் அலைந்தாள் எனக்குமிட்டியும்..
கூடப் பொறப்புன்னா லேசா ஆகுமா போய் வந்தால்
அலைந்த கதையை
ஒரு ராமகிருஷ்ணன் சிறுகதை போல வடிப்பாள்..
பொண்ணு காபிக் கலரில் புடவைக் கட்டிக் கொண்டு வந்து
காபி கொடுத்தாள்..
ருக்கு ”எடுத்துக்கடா” என்றாள்..
”மாகாளில போனவளே..புள்ள வாத்திருக்கா பாரு..”மனதிற்குள் நினைத்தபடியே பேரொண்ணொ…என்றேன்..பொறப்பிடம்..
”மாகாளியம்மா..”என்றபடி கிழக்கு நோக்கி கும்பிடுகிறாள்..
பாத்தியா பொருத்தம் காபிக்கலருக்கு காபிக்கலர்
என நமுட்டு சிரிப்பு சிரித்தாள்..
பஸ் ஸ்டேண்ட் வரை வந்த புரோக்கர் எச்சரிக்கிறார்
”ருக்கு காபி எல்லாம் குடிச்சிட்டிங்க.ஊரு போனதுகப்புறம்
ஆகாதுன்னுன்றாதீங்க..இனி வர்ற முகூர்த்தம் எல்லாம் வளர்பிறைல வருது..
நழுவ விட்றாதீங்க…
ருக்குக்கு தலையில் இடிவிழுந்தது மாதிரி
மாகாளியம்மாள் பெண் பிள்ளையைப் பெற்றாள்..
பெரியாஸ்பத்திரியில் எள்ளுப் பொறியறமாதிரி
கடுகடுத்தபடியிருந்தாள்..
பிள்ளையைப் பார்க்க வருபவர்களிடம் சிடுசிடுவென்றானாள்..
யாருக்கும் ஒரு வரக்காப்பி கூட வாங்கிக் கொக்கவில்லை
போகிறவர்களிடமும் போக முற்பட்டவர்களிடமும்
”சேரி ஆகட்டும். அந்தோணியார் தேருக்கு
வர்றம்போ” .
நான் பிள்ளைக்கு பச்சுக்கானா வாங்கப் போய்
காலச்சுவடு உயிர்மை உயிரெழுத்து எல்லாம் பார்த்து வாங்கிவிட்டு
சாவகாசமா வர ருக்கு பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டாள்..
எனக்கும் கோவம் வராதா …
சரிக்குச் சரி சண்டை மூண்டு விட்டது
இதுநா வரை செய்த சீர் செனத்தியெல்லாம் சொல்லிக்காட்டி விட்டு
திட்டிவிட்டு பஸ்ஸ்டேண்ட் ஓடினாள்..
மாகாளியம்மாளும் ஆளாது சொல்லியும் கேட்கவில்லை
பின்னாலயே ஓடினேன்..
”ந்தே இன்த வரக்காப்பி மூஞ்சி வெச்சிட்டு எம்பின்னால வராதே
போயிரு அக்கட்டல்ல..என்றாள்…
பட்டப் பெயரைச் சொன்னதுக்கப்பறம் என்ன கூடப்பெறந்த பெறப்பு..போ..
விதி உன்னிடமும் விளையாடுகிறது…
அவள் நினைத்த மாதிரியே செண்பகவள்ளி
மேஜரான பின்பு ருக்குவிற்கும் செண்பகாவிற்குமாக
சொத்து பிரித்து எழுதிக்கொண்டோம்..
பத்திரப்பதிவன்று ருக்கு அத்தனைப் பிரியமாக
பொழுதுக்கும் காபி குடி காபி குடி என்றே சொல்லிக் கொண்டேயிருந்தாள்..
பிறகு அவளுக்கு மகன் முறைமையிலேயே ஒரு பையனைக் கண்டுபிடித்து
செண்பகாளுக்கு கல்யாணத்திற்கு நச்சரித்தாள்..
பவுனுகிவுனு ஒண்ணுங்கேட்கமாட்டாங்க..
பய நம்ம பய கட்றான்னா கட்டிருவான் என்ற சொல்ற..
ஜவுளிக்கே தேர்க்கூட்டம் போனது..கடைக்கார சிப்பந்தி
வழிச்சுக் கொட்டின வண்ணக் குவியலிலிருந்து ருக்கு
காபிக் கலர் சீலையை தேர்ந்தெடுத்தாள்..
பையன் வீட்டுக்காரர்கள் தேர்வு செய்த சின்ன புட்டா அடிப்பார்டர்
கட்டையாக இருந்ததைக் காரணம் காட்டித் தவிர்த்து
”என் தம்பிக்குப் புடிச்ச கலருங்க….”-என்றாள் பொறப்பு ருக்கு…
* * *
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக